மேக வெடிப்பால் வெள்ளத்தில் மிதக்கும் வட மாநிலங்கள்!
மேக வெடிப்பால் இமாச்சல், உத்தரகண்ட், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகிறது.
இமாச்சல், உத்தரகண்ட், உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கத்தை விட அதீத மழை பொழிந்ததால் ஆறுகள் நிரம்பி, மாநிலம் கடல் போல காட்சியளிக்கிறது. மேக வெடிப்புகளே இந்த அதீத மழைக்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும், புவியின் வெப்ப அதிகரிப்பு பருவநிலை மாற்றங்களை கொண்டு வந்திருப்பதாக புவியியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
“ தொடர்ந்து புவியின் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வந்தால் இந்தியா என்னும் நாடும், நாட்டு மக்கள் தொகையும் பாதியாக கூட வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்து இருக்கின்றனர் “