பாட் கம்மின்ஸ் தலைமையில் புதிய விஸ்வரூபம் எடுக்கும் சன்ரைசர்ஸ்!
பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி, வழக்கமான அணியாக இல்லாமல் தற்போதெல்லாம் ஒரு புதிய விஸ்வரூபம் எடுக்கிறது.
முன்பெல்லாம் சன்ரைசர்ஸ் போட்டி என்றாலே பெரும்பாலும் ஐபிஎல் ரசிகர்கள் பார்க்கவே தயங்குவார்கள், ஏனென்றால் அவ்வளவு போரிங்கான ஒரு போட்டியாக இருக்கும். ஆனால் தற்போது அதையெல்லாம் மாற்றி ஒரு புதிய அணியாக இந்த சீசனில் தோற்றமளிக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். அதற்கு காரணம் அதன் புதிய கேப்டனாக பொறுப்பேற்று இருக்கும் பாட் கம்மின்ஸ் என்று கூறப்படுகிறது.
இதுவரை ஒரு முறை சாம்பியன், ஒரு முறை ரன்னர் அப், நான்கு முறை ப்ளே ஆஃப் என ஒரு டீசண்டான ரெக்கார்டை தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வைத்து இருக்கிறது என்றாலும் கூட கடந்த மூன்று வருடங்களாக லீக் ஸ்டேஜில் இருந்தே வெளியேறி வருகிறது. இதற்கு காரணம் சரியான ப்ளேயர்கள் இருந்தாலும் கூட அவர்களுக்குள் ஒரு சமநிலை இல்லாமல் இருந்தது.
தற்போது கேப்டனாகி இருக்கும் பாட் கம்மின்ஸ், அணியின் அந்த சரியான சமநிலையை மீட்டு கொண்டு வந்து இருக்கிறார். சரியான பிளேயிங் 11 யை கண்டு பிடித்து இருக்கிறார். பவுலிங் ரொட்டேசன், பேட்டிங் ரொட்டேசன் என எல்லாமே பெர்பெக்டாக செய்கிறார். இதனால் நாம் வழக்கமாக பார்க்கின்ற சன்ரைசர்ஸ் அணியில் இருந்து தற்போது பார்க்கும் சன்ரைசர்ஸ் அணி ஒரு சாம்பியன் அணியாக கண்ணுக்கு தெரிகிறது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடி இருக்கும் சன்ரைசர்ஸ் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 5 ஆவது இடத்தில் இருக்கிறது. பெற்ற 3 வெற்றிகளுமே அதிரடி வெற்றிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“ இப்படியே இதே வலிமையோடு தொடர்ந்து சன்ரைசர்ஸ் விளையாடினால் பாட் கம்மின்ஸ் பெயரில் இன்னும் ஒரு கோப்பையை எழுதி விடலாம் “