சங்க காலத்திலேயே உலகளாவிய அளவில் வாணிபம் செய்த தமிழர்களின் பழம் பெரும் துறைமுகம்!

All The Details You Know About Sangam Age Poompuhar Idamporul

All The Details You Know About Sangam Age Poompuhar Idamporul

உலகின் தொன்மையான நாகரிகம் என்றால் அதை மெசபடோமியா நாகரிகம் என்று கூறுவர். அது கிட்ட தட்ட 6500 ஆண்டுகள் பழமையானது. ஆனால் அதற்கெல்லாம் பழமையானது தமிழ் நாகரிகம் என்று கூறினால் நம்ப முடிகிறதா?

பூம்புகார், காவேரிப்பூம்பட்டினம், புகார் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த நகரம் சங்க காலச் சோழர்களின் துறைமுக நகரமாக அறியப்படுகிறது. தற்போதைய மயிலாடுதுறைக்கு அருகாமையான பகுதியை தான் அன்றைய புகார் நகரமாக கூறுகின்றனர். உலகின் பல நாடுகள் தங்கள் அடையாளத்தை அறிவதற்கு முன்னதாகவே, தமிழன் இத்துறைமுகத்தின் மூலம் கடல் கடந்து கப்பலில் வாணிபம் செய்து இருக்கிறான் என்பதற்கான சான்று இந்த புகார் நகரம்.

கிரேக்கம், ரோம் உள்ளிட்ட நகரங்களுக்கு கடல்வழியாக புகாரில் இருந்து பெரும் வாணிபம் நடைபெற்று வந்ததாம். ஏற்றுமதி, இறக்குமதி என சங்க காலத்திலேயே இந்த துறைமுகம் அவ்வளவு பிசியாக இருக்கும் என கூறப்படுகிறது. வெளிநாட்டவர்கள் பலரும் இங்கு வந்து தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த காலக்கட்டத்திலேயே அங்கு வீடுகளும் தெருக்களும் சந்தைகளும் நேர்த்தியாக கட்டப்பட்டிருந்ததாம்.

இந்த துறைமுகம் குறித்து பல்வேறு வெளிநாட்டு அறிஞர்களும், வாணிபர்களும் தங்கள் குறிப்புகளில் எழுதி வைத்து இருக்கின்றனர். இது போக தமிழின் இரட்டை காப்பியங்களாக அறியப்படும் மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகிய நூல்க்ளிலும், உருத்திரங்கண்ணனாரின் பட்டினப்பாலையிலும் புகார் நகரம் பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கி.பி 200 ஆம் நூற்றாண்டு வரை மிகப்பெரும் வாணிப நகரமாக விளங்கிய புகார் நகரம் ஆழிப்பெருக்கினால் அழிந்திருக்க கூடும் என தெரிகிறது. இன்றும் அதன் சுவடுகள் கடலுக்கடியில் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆய்வு செய்தால் தமிழ் நாகரிகத்தின் தொன்மையை உலகம் அறிய அது சான்றாக அமையும்.

” பட்டினப்பாலை நூலை இயற்றிய உருத்திரங்கண்ணனாரின் காலம் கி.பி இரண்டாம் நுற்றாண்டு என்றால் யோசித்துப் பாருங்கள் நமது தமிழ் நாகரீகம் என்பதன் வயது என்னவாக இருக்குமென்று “

About Author