தென் தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!
There Will Be A Rain For Next Two Days South TN 29 09 23 Idamporul
தென் தமிழகத்திற்கு இன்னும் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. சில நாட்களாவே தென் தமிழகத்தை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இந்த மழை இதம் கொடுக்கலாம்.
“ சென்னை, திருவள்ளூரு உள்ளிட்ட வட தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் மழைப் பொழிவு இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது “