Bigg Boss Tamil 7 | Day 53 | Review | ‘ஒட்டு மொத்தமாக தினேஷ்சை டார்கெட் செய்த இல்லம் ’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், ஐம்பத்து மூன்றாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: ஷாப்பிங் ரீ பேமெண்ட் டாஸ்க், உருட்டு அப்படி – டைரக்ட் நாமினேசன்ஸ் – அர்ச்சனா, தினேஷ் கான்வர்சேஷன் – பூகம்பம் டாஸ்க் 3 – வாழ்க்கையின் பூகம்பம்
கொஞ்சம் கடினமான டாஸ்க் தான், ஆனாலும் 14 பேரும் விளையாடும் இந்த டாஸ்க்கில் 7 பேர் ஜெயித்தால் போதுமானது. அவ்வாறு தோற்கும் பட்சத்தில் அடுத்த வாரத்திற்கான எவிக்சன் நாமினேசனுக்கு ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சேர்ந்து ஒருவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு. அதை கருத்தில் கொண்டே யாரும் நேர்மையாக டாஸ்க்கில் ஜெயிக்க வேண்டும் என்று விளையாடிது போல இல்லை. ஒருவரை கண்டிப்பாக நாமினேட் செய்ய வேண்டும் என்பதை முன்னதாகவே முடிவு செய்துவிட்டனர்.
நாமினேசனின் போது கேப்டன் தினேஷ் அவர்களையே அதிக போட்டியாளர்கள் நாமினேட் செய்தனர், ரொம்ப ஸ்ட்ரிக்ட், இது ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சியும் கூடன்னு மறந்திட்டாரு, நெறைய கேமரா முன்னாடி ரிஜிஸ்டர் பண்ணுறார்னு தோனுது போன்ற காரணங்களை கூறி தினேஷ் அவர்களை அதிக பேர் நாமினேட் செய்தனர். இதன் காரணமாக தினேஷ் அடுத்த வார எவிக்சன் பிராசஸ்சிற்குள் நேரடியாக நுழைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக தினேஷ் அடுத்த வாரமும் கேப்டன்சிப்பில் இருக்க கூடாது என்ற காரணத்திற்காகவே போட்டியாளர்களால் டைரக்ட் நாமினேசனுக்குள் கொண்டு வரப்பட்டார். இதை சரியாக பயன்படுத்தி இருந்தால் நாமினேசனுக்குள் வராமல் தப்பித்துக் கொண்டே இருக்கும் ஜோவிகா உள்ளிட்ட பிளேயர்களை நாமினேசனுக்குள் இழுத்து இருக்கலாம் என்பது அர்ச்சனாவின் கருத்தாக இருந்தது.
பூகம்பம் டாஸ்க் 3, சீசாவின் இரு முனைகளில் ஒரு முனை கால் பக்கம், இன்னொரு முனை வெயிட்டுகளை அடிக்கி வைக்கும் இடம் என இரண்டையும் சரியாக பேலன்ஸ் செய்ய வேண்டும், வெயிட்டுகளையும் நிற்க வைக்க வேண்டும். கால் பகுதி தரையில் பட கூடாது, 14 பேரும் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்பது டாஸ்க். கொஞ்சம் அனைவருமே பக்காவாக ட்ரை தான் செய்தார்கள். ஆனாலும் டாஸ்க்கில் ஜெயிக்க முடியவில்லை. இதனால் இரண்டு வைல்டு கார்டு போட்டியாளர்கள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறார்கள், எவிக்சனின் எண்ணிக்கையும் மாறுபடும் என பிக்பாஸ் அறிவித்து இருக்கிறார்.
அடுத்தகட்டமாக வாழ்க்கையின் பூகம்பம் டாஸ்க் மீண்டும் துவங்கியது. ஆர் ஜே பிராவோ தனது வாழ்க்கையில் நிகழ்ந்த இழப்புகள், ஒரு ஆணால் தான் பெர்சனலாக பாதிக்க பட்ட விதம் ஆகியவற்றை தனது கதைகளில் எடுத்துரைத்தார். மணி ஒரு டான்சராக உருவெடுப்பதற்கு தான் பட்ட கடினங்கள், இடையில் தந்தையின் இழப்பு ஆகியவற்றை உருக்கமாக கண்ணீர் மல்க எடுத்துரைத்தார். விஷ்ணு, தான் ஹீரோவாக நினைத்த சித்தப்பா அவர்களின் இழப்பே, தன் வாழ்க்கையின் பூகம்பம் என எடுத்துரைத்தார்.
“ ஒரு பக்கம் இரண்டு பூகம்பம் டாஸ்க்கிலும் தோல்வி, இன்னொரு பக்கம் வீட்டின் பொழுது போக்கு அம்சத்தை உடைத்ததாக கூறி அடுத்த வாரத்தின் டைரக்ட் நாமினேசனிற்குள் இழுக்கப்பட்ட தினேஷ் என இரண்டு முக்கியமாக நிகழ்வுகள் இந்த எபிசோடில் அரங்கேறி இருகிறது “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !