Bigg Boss Tamil 7 | Day 56 | Review | ‘இல்லத்தார்களின் மிதப்புகளை போட்டு உடைத்த அனன்யா மற்றும் விஜய்’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், ஐம்பத்து ஆறாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
ஹைலைட்ஸ்: விமர்சனத்தை ஏற்காதவர்கள் – கமல் அவர்களின் கோபம் – விஜய் வர்மா என்ட்ரி – புத்தக பரிந்துரை – அக்ஷயா எவிக்சன் – அனன்யா என்ட்ரி
விமர்சனத்தை இந்த வீட்டில் ஏற்காதவர்கள் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது, பெரும்பாலோனோர் அர்ச்சனாவின் பெயரைக் கூறினர். ஆனால் கமல் அவர்கள் எதிர்பார்த்தது நிச்சயம் பூர்ணிமாவின் பெயராக தான் இருக்கும். ஆனாலும் இந்த வீட்டைப் பற்றி தான் தெரியுமே, யாராவது ஒருவர் ஒரு பெயரை சொல்லிவிட்டால் அந்த பெயரை அப்படியே வரிசையாக சொல்லி காரணங்களை மட்டும் மாற்றிக் கொள்ளுவர். அர்ச்சனா தரப்பில் விமர்சனங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் என்ன மெருகேற்றும் நோக்கிலும் இருந்தால் ஏற்றுக்கொள்வேன், இல்லையேல் நிராகரிக்க தான் செய்வேன், இங்கு நான் நானாக இருக்க கூடாது என்பதற்காக என்னை நோக்கி வரும் விமர்சனங்களை தள்ளி வைக்க தான் செய்வேன் என்று பதிலளித்தார்.
எந்த எந்த விஷயத்தை எனக்கு கேக்கனும்னு தெரியும், அத கேட்பேன், இத மட்டும் கேக்கல்லன்னு வைய்யேன், என்ன பண்றேன்னு பாரு அப்படின்னு நீங்க பேசிட்டு இருக்கீங்க, அப்படி என்ன தான் பண்ணுவீங்க சொல்லுங்களேன், என்ன ஒன்னும் பண்ணிட முடியாது, சும்மா கைதட்டு வரல, அவங்கள கேக்கலன்னு சொன்னிங்கன்னா சொன்னா மட்டும் எல்லாம் மாறிடுமா, அதுக்கு நீங்க மாறனும் முதல்ல, என பூர்ணிமாவின் பெயரை குறிப்பிடாமலே, பூர்ணிமாவிற்கு கமல் அவர்கள் குட்டு வைத்ததெல்லாம் இன்றைய எபிசோடின் மாஸ் சீன்கள்.
அடுத்தகட்டமாக விஜய் வர்மா முதல் வைல்டு கார்டு என்ட்ரி, ஒரு ப்யூர் மாஸ் என்ட்ரியாகவே இருந்தது. வந்ததுமே ஒவ்வொரு போட்டியாளர்களையும் வச்சு செய்தார். ஒவ்வொருவரின் நெகட்டிவையும் கூறி, அதை நான் நிச்சயம் களைவேன் ஒரு சுத்தியலை வைத்துக் கொண்டு அவர்களின் போட்டோவை சல்லி சல்லியாக நொறுக்கியதெல்லாம் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு அல்லு விட்டது. கொஞ்சமாவது பாசிட்டிவாக கூறியது விசித்ரா, தினேஷ், அர்ச்சனாவிற்கு மட்டும் தான். பெரும்பாலும் ஆடியன்ஸ்சின் கருத்துக்களுடன் ஒத்துப்போனார் விஜய் வர்மா.
சுதந்திர போராட்டத்தின் ஒரு சில உண்மைகளை உடைத்து எறியும் புத்தகமாக கூறி மல்கோங்கர் மனோகர் எழுதிய ‘Bend In The Ganges‘ புத்தகத்தை பரிந்துரை செய்தார் கமல் ஹாசன் அவர்கள். இது ஒரு வரலாற்று புத்தகம் சுவாரஸ்யம் இருக்காது என்றெல்லாம் நினைக்க வேண்டாம், பல்வேறு சுவாரஸ்யங்களை ஒவ்வொரு பக்கத்திலும் அவிழ்த்து விடும் ஒரு சிறந்த சுவாரஸ்யமான புத்தகமாகவே இருக்கும் என்று கமல் அவர்கள் கூறி இருந்தார். புத்தகத்தை படிக்க நினைப்பவர்கள் கீழ் இருக்கும் லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அடுத்த கட்டமாக அக்ஷயாவின் எவிக்சன், அனைவரும் அறிந்தது தான் என்றாலும் கூட ஒரு நல்ல ப்ளேயர் தான். அவரை நிரூபிக்கும் வரையில் சரியாக டாஸ்க்குகள் ஏதும் கொடுக்கப்படவில்லை என்பது தான் உண்மை. அவருக்கு பேசும் ஆற்றல் இல்லை, செல்போன் சார்ஜிங் டாஸ்க்கில் எல்லாம் அவர் விளையாடிய ஒரு ஆட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. யாரையும் எந்த விதத்திலும் கண்டண்டுக்காக காயப்படுத்தவில்லை என்பது அவரது சிறந்த குணமாக எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்தகட்டமாக அனன்யாவின் என்ட்ரி, இதுவும் கொஞ்சம் மாஸ்சாக தான் இருந்தது. ஆனாலும் விசித்ராவிற்கு அவர் கொடுத்த டாக்கில் மட்டும் கொஞ்சம் வஞ்சகம் இருந்தது. டாட்டூ மேட்டரை இன்னும் அவர் மறக்கவில்லை போல. ஆனாலும் நிக்ஸனை போட்டு உடைத்த விதம் மாஸ்சாக இருந்தது. விஜய் வர்மாவும் சரி, அனன்யாவும் சரி நிக்ஸனின் விஷயத்தை நேரடியாக போட்டு உடைத்த விதம் ஆடியன்ஸின் ஆதங்கம் தான். அதை அவர்கள் பிரதிபலித்தது சரியான விதமாக இருந்தது.
“ முதல் நாள் ரிவ்யூ கொடுத்து விட்டு அப்படியே அடுத்தடுத்த நாட்கள் டவுன் ஆகி விடாமல் இதே பயரோடு, விஜய் வர்மாவும், அனன்யாவும் ஆட்டத்தை மேற்கொண்டால் நிச்சயம் இனி வரும் எபிசோடுகள் சுவாரஸ்யமாக இருக்கலாம் “
மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !