Raja Rani 2 Today Episode | 14.02.2022 | Vijaytv
Raja Rani 2.14.02.2022
ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் எப்போதும் போல கடைக்கு கிளம்பி சென்றார். ஆனால் அங்கு கடையில் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் அலை மோதியது. இதை பார்த்த சரவணன் இது நம்ம கடை தானா என்று ஆச்சரியமாக பார்த்தார். பின் கடையில் வந்து வேலைகளை செய்ய ஆரம்பித்தார். கடைக்கு வரும் அனைவரும் சரவணனை புகழ்ந்து பேசினார்கள். இவளோ சின்ன ஊரில் இருந்து சின்ன கடை வைத்து இருப்பவர், இவளோ பெரிய போட்டியில் கலந்து பரிசு வாங்கி இருக்கிறார் என்று பெருமையாக பேசினார்கள். வருபவர்கள் அவருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார்கள். சரவணனுக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. வீட்டில் இருக்கும் மைதா மாவு, பருப்பு என்று வாங்கி வைத்த சரக்கு முழுதும் தீரும் அளவுக்கு வியாபாரம் ஓடியது. அதை தன் அம்மா சிவகாமியிடம் சொல்லி மகிழ்ச்சி அடைந்தார். இதை கேட்ட அர்ச்சனா வயிரு எரிந்தது. செந்திலும் அர்ச்சனாவுக்கு அழைத்து சரவணன் வாங்கி வந்து பேரு,புகழ் மற்றும் பரிசுக்கு இவளோ வரவேற்பு என்று பெருமையாக பேசினார். இந்த கடுப்பில் இருந்த அர்ச்சனா வீட்டில் எதையாவது செய்து சந்தியா மேல் அந்த பழியை போட வேண்டும் என்று நினைத்தார். சந்தியா, சிவகாமியின் துணியை மடித்து வைத்தார். அதை பார்த்த அர்ச்சனா, மடித்து வைத்த புடவையை கத்தரிக்கோலால் வெட்டினார். அந்த பழியை சந்தியா மீது போட நினைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…