உதயநிதி அவர்களின் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது!

Udhay Stalin In And As Nenjukku Neethi Teaser Is Out

உதயநிதி ஸ்டாலின் – அருண் காமராஜ் இணையும் ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. காமெடி, காதல் என்ற இரண்டு கலவையை வைத்து மட்டுமே படங்களில் நடித்துக் கொண்டு இருந்த உதய், ’மனிதன்’ என்று ஒரு உணர்வுபூர்வமான படத்தில் நடித்து ஜெயித்தும் இருந்தார். அது போலவே தற்போது அருண் காமராஜ் உடன் ’நெஞ்சுக்கு நீதி’ என்ற படத்தில் இணைந்திருக்கிறார். டீசர் வெளியாகி இருக்கிறது. படமும் ஜெயிக்கும். “ இது போல படங்களை தொடர்ந்து தேர்வு செய்து … Read more

மறைந்த புனீத் ராஜ்குமார் அவர்களின் ‘ஜேம்ஸ்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது!

Actor Puneeth Rajkumar James Movie Teaser Is Out

மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் நடித்து இருக்கும் ‘ஜேம்ஸ்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் மாரடைப்பால் காலமான நடிகர் புனீத் ராஜ்குமார் அவர்களை இனி திரையில் காண முடியாமல் போய் விடுமோ என்று ரசிகர்கள் ஏங்கிய நிலையில் அவர் கடைசியாக நடித்துக் கொடுத்துச் சென்ற ‘ஜேம்ஸ்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கண்ணீர் மழையில் நனையச் செய்து இருக்கிறது. “ எப்போதும் கொண்டாட்டத்தோடும் உற்சாகத்தோடும் டீசரை வரவேற்கும் ரசிகர்கள், முதன் முறையாக கண்ணீரோடு வரவேற்கின்றனர் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 58,077 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 11 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 58,077 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் புதியதாக 58,077 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 657 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,07,177 ஆக உயர்ந்து இருக்கிறது. “ ஒமிக்ரான் உலகளாவிய அளவிலும் சரி இந்தியாவிலும் … Read more

அசோக் செல்வன் – வெங்கட் பிரபு இணையும் ’மன்மத லீலை’ திரைப்படத்தின் ’Glimpse’ வெளியானது!

Ashok Selvan In And As Manmadha Leelai Glimpse Is Out

நடிகர் அசோக் செல்வன் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு இணையும் ‘மன்மத லீலை’ திரைப்படத்தின் ‘Glimpse’ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ராக்போர்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில், அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட், பிரேம்ஜி அமரன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மன்மத லீலை’ திரைப்படத்தின் ’Glimpse’ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ எப்போதும் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்யும் அசோக் செல்வன், மிகவும் வித்தியாசமான … Read more

ஹிஜாப் விவகாரம் | ‘கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு’

Karanataka Court Issue The Sensational Verdict In Hijab Issue 1

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், கர்நாடக நீதிமன்றம் ஒரு பரபரப்பு தீர்ப்பை அறிவித்து இருக்கிறது. மும்முனை நீதிபதிகளின் அமர்வுகளின் வாயிலாக நடைபெற்ற விசாரணையின் முடிவில், ஹிஜாப் அணிவது அடிப்படை உரிமைகளின் கீழ் வருகிறதா, இஸ்லாமிய நடைமுறையில் அது உறுதி செயப்பட்டு இருக்கிறதா என்பது குறித்து தீர விசாரித்த பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தீர்ப்பு வரும் வரை மாணவர்கள் ஹிஜாப், காவித்துண்டுகள் என்று மத வாத ஆடைகளை தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டு இருக்கின்றனர். “ … Read more

அறிவிக்கப்பட்டு இருந்த ‘புத்தகப்பை இல்லா தினம்’ திடீரென ரத்து!

Tamilnadu Government Cancelled No Bag Day

தமிழக பள்ளி மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருந்த ‘புத்தகப்பை இல்லா தினம்’ திடீரென ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. ஆந்திர அரசு முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு ‘புத்தகப்பை இல்லா தினம்’ ஆக அறிவித்து இருந்தது. அது போல தமிழகத்திலும் 6-8 வகுப்புகளுக்கு பிப்ரவரி 26 அன்று ‘No Bag Day’ அனுசரிக்கப்படும் என்று அறிவித்து இருந்த நிலையில், தற்போது அது ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. ” கொரோனா … Read more

ரஜினி 169 | ’நெல்சன் – ரஜினி காந்த் கூட்டணி அதிகாரப்பூர்வமானது’

Thalaivar 169 Rajini kanth Join Hands With Nelson Confirmed

இயக்குநர் நெல்சன் – ரஜினிகாந்த் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தலைவர் 169 திரைப்படத்திற்காக இயக்குநர் நெல்சன் – ரஜினிகாந்த் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் தயாரிப்பாளராக சன்பிக்சர்ஸ் நிறுவனம் களம் இறங்கி இருக்கிறது. படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் அவர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். “ இளம் இயக்குநர்களுக்கு பெரிய நட்சத்திரங்கள் வாய்ப்பு கொடுப்பது தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் அதிகரித்து வருகிறது. இந்த சூழல் நிச்சயம் கோலிவுட்டை தூக்கிப்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை “

’பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வரவில்லையெனில் உத்திரபிரதேசம் காஷ்மீராகவோ, கேரளாவாகவோ, மேற்கு வங்கமாகவோ மாறும்’ – யோகி

Yogi Adityanath Making False Statements Against Kerala West Bengal And Kashmir

பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வரவில்லையெனில் உத்தரபிரதேசம் காஷ்மீர், கேரளா போல மாறும் என யோகி ஆதித்யநாத் வாக்காளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். மாநில தேர்தல்கள் ஆரம்பிக்க இருக்கும் நிலையில், உத்தரபிரதேசத்தில் மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வரவில்லையெனில், உ.பி காஷ்மீராகவோ, கேரளாவாகவோ, மேற்கு வங்கமாகவோ மாறும் என யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். அவரது இந்த கருத்துக்கு யோகியை நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர். “ தொடர்ந்து மதம், இனம் என்று மக்களை மூட்டி அரசியல் செய்யும் … Read more

உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் டீசர் அப்டேட் அறிவிக்கப்பட்டு இருக்கிறது!

Udayanidhi Stalin Nenjukku Neethi Teaser Update 1

உதயநிதி – அருண் காமராஜ் இணையும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் டீசர் அப்டேட் வெளியாகி இருக்கிறது. போனிகபூர் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் அருண் காமராஜ் அவர்களின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், ஆரி அர்ஜூனன், தன்யா ரவிச்சந்திரன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் டீசர் நாளை (11-02-2022) மதியம் 12:30 மணி அளவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. “ உதயநிதியிடம் இருந்து ‘மனிதன்’ போன்ற திரைப்படமே அனைவரும் எதிர்பார்ப்பது, அந்த எதிர்பார்ப்பை இந்த … Read more

தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 171.28 கோடியை தொட்டு இருக்கிறது!

Vaccination In India Reached 171 Crores Plus

ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 171.28 கோடியைத் தொட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 46.44 இலட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதை அடுத்து தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 171.28 கோடியாக ஆகி இருக்கிறது. இந்த வருட இறுதிக்குள் தடுப்பூசிக்கு தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. “ உலகளாவிய அளவில் தடுப்பூசி செயல்பாடுகளில் இந்தியாக சிறப்பாகவே செயல்பட்டு … Read more