18 வயதில் அமெரிக்க ஓபன் பட்டம், சாதித்த எம்மா ரடுகானு!

Emma Raducanu Wins US Open Grand Slam

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் 18 வயதே ஆன எம்மா ரடுகானு, கனடாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை லேலா அன்னியை வீழ்த்தி அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றினார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் பதினெட்டு வயதே ஆன பிரிட்டன் வீராங்கனை எம்மா ரடுகானு, கனடா வீராங்கனை லேலா அன்னியை எதிர்கொண்டார். விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-4,6-3 என்ற நேர்செட் கணக்கில் லேலா அன்னியை வீழ்த்தி எம்மா ரடுகானு அமெரிக்க ஓபன் … Read more

தன் கோல்டன் ஸ்லாம் கனவை தகர்த்தவரை யு.எஸ்.ஓபனில் பழி தீர்த்த ஜோகோவிச்!

Djokovic Won In US Open Semi Final

யு.எஸ்.ஓபன் அரையிறுதியில் செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச், ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரெவ்வை 3-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். யு.எஸ் ஓபன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச், தனது ஒலிம்பிக் தங்க கனவை தகர்த்த ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை எதிர் கொண்டார். நீண்ட நேரம் நீடித்த இந்த பரபரப்பான போட்டியில் 4-6,6-2,6-4,4-6,6-2, என்ற புள்ளி கணக்கில் ஜோகோவிச், ஸ்வெரெவ்வை தோற்கடித்து தன் கோல்டன் ஸ்லாம் கனவை தகர்த்தவரை பழிக்கு … Read more

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

டி20 உலக கோப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. விராட் கோஹ்லி (C), ரோஹிட் சர்மா (VC), கே எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, ராகுல் சஹர், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரீட் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகம்மது சமி, ரிஷப் பண்ட் (WK), இஷான் கிஷன் (WK) … Read more

கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

நேற்று நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 50 வருடங்களுக்கு பிறகு ஓவல் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்றிருந்தது. இந்த சாதனையோடு பும்ராவும் ஒரு சாதனையை ஓவல் டெஸ்ட்டில் நிகழ்த்தி இருந்தார். இதுவரை கபில்தேவ் அவர்கள் 25 போட்டிகள் விளையாடி 100 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இருந்ததே சாதனையாக இருந்தது. நேற்று நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இரண்டு விக்கெட்டுக்களை பும்ரா அவர்கள் வீழ்த்தியதன் மூலம் 24 … Read more

50 வருடங்களுக்கு பின் ஓவல் மைதானத்தில் வெற்றியை பதிவு செய்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி!

இந்தியா – இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று நான்காவது நாளில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுக்களையும் பறி கொடுத்து இந்திய அணியிடம் வீழ்ந்தது. கடைசியாக 1971-ஆம் ஆண்டு அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணி ஓவல் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றியை பதிவு செய்திருந்தது. அதற்கு பின் 50 வருடங்களுக்கு பிறகு கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக ஓவல் டெஸ்ட்டில் தங்களது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. … Read more

யார்க்கர் அரக்கன் லசித் மலிங்கா பிறந்த தினம் இன்று!

ஒரு ஓவரில், ஒரு யார்க்கர் என்பதே பவுலர்களுக்கு வரமாகிப்போகும். ஆனால் இவரோ நினைத்த நேரத்தில் எல்லாம் யார்க்கரை வீசி பேட்ஸ்மேன்களை நிலைகுலைய செய்வார். சுருட்டை முடி, சிங்க வேகம், கையில் பந்தை வாங்கிக்கொண்டு முத்தமிட்டு ஓடி வந்து இவர் எறிகின்ற யார்க்கர்களில் ஸ்டம்புகள் சிதறும். ஆம் அவர் தான் யார்க்கர் மன்னன் லசித் மலிங்கா. இன்று அவரின் பிறந்த தினம். இலங்கைக்கு சமிந்தா வாஸ் அவர்களின் ஓய்விக்கு பிறகு அவரின் வெற்றிடத்தை நிரப்ப ஒரு மிகப்பெரிய பவுலரின் … Read more

பாராலிம்பிக்ஸ்: இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தார் பவினா படேல்

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் மகளிர் பிரிவில் காலிறுதியை வென்றதன் மூலம் அரையிறுதிக்குள் நுழைந்து இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தார் பவினா படேல். பாராலிம்பிக்ஸ் மகளிர் டேபிள் டென்னிஸ் கிளாஸ் 4 ஆட்டத்தில் பிரேசிலின் ஒலிவேரியாவை எதிர்கொண்ட இந்திய வீரர் பவினா படேல் அதிரடியாக விளையாடி 3-0 என்ற கணக்கில் எளிதாக வென்று காலிறுதிக்கு முன்னேறினார். அதற்கு பின் காலிறுதியிலும் அதிரடி காட்டிய பவினா உலகின் நம்பர் 2 வீராங்கனையான செர்பியாவின் போரிஸ்லவாவை 3-0 என்ற … Read more

தொடர்ந்து சொதப்பும் கோலி,78 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி!

லீட்ஸ் மைதானம், இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, பேட்டிங்குக்கு சாதகமான களம், டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி. பால் பழையதாக பழையதாக பேட்டிங்குக்கு சாதகமாகும் என்ற நிலையில் பொறுமையா ஆடாமல் முதல் 11 ஓவர்களுக்குள்ளேயே ராகுல்,புஜாரா மற்றும் கோலி உட்பட மூன்று நட்சத்திர வீரர்களும் தங்கள் விக்கெட்டுக்களை ஆண்டர்சனின் ஆக்ரோசத்திடம் பறி கொடுத்தனர். ரோஹிட் (19), ரஹானே (18) தவிர மீதமுள்ள அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க … Read more

இன்று முதல் தொடங்குகிறது பாராலிம்பிக்ஸ்!

Paralympics Tokyo 2021

ஒலிம்பிக் போட்டிகள் தற்போது தான் முடிந்த நிலையில் தற்போது பாராலிம்பிக்ஸ் டோக்கியோ-வில் தொடங்க இருக்கிறது. இதில் ஒட்டு மொத்தமாக 4500 பேர் பங்கேற்க இருக்கின்றனர். இந்தியா சார்பில் 54 பேர் பங்கேற்க இருக்கின்றனர். தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் கொடி அணி வகுப்பு நடத்த இருந்த நிலையில் அவர் கொரோனோ சூழலில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் டெக் சந்த் இந்திய கொடியை ஏந்தும் வாய்ப்பை பெற்றார். இன்று தொடங்கும் பாராலிம்பிக்ஸ் செப்டம்பர் 5 வரை நடைபெற … Read more