தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

TN Puducherry Getting Rain For Next 7 Days 13 6 24 Idamporul

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை இருக்க கூடும் என்ற தகவல் கிடைத்து இருக்கிறது. த்மிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலை சுற்றியுள்ள ஒரு சில பகுதிகளிலும் அடுத்து வரும் 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை இருக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. ஏற்கனவே மழை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆரம்பித்து விட்டதாக கூடுதல் தகவல். … Read more

விசிக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கும் மட்டும் வாழ்த்து, இதனால் விஜய் சொல்ல வரும் அரசியல் என்ன?

TVK Vijay Political Plan Behind Congrats Tweet Of VCK And NTK Idamporul

மாநில அந்தஸ்து பெற்ற விசிக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கும் மட்டும் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்து இருப்பதன் மூலம், அவரது எதிர்கால அரசியலின் பாதை என்ன என்பது சற்றே புலப்படுகிறது. மாநிலத்தில் வென்று இருக்கும் ஆளும் கட்சிக்கோ அல்லது மத்தியில் வென்று இருக்கும் ஆளும் கட்சிக்கோ, அல்லது மத்தியில் இம்முறை சிறப்பாக செயல்பட்ட எதிர்கட்சிக்கோ வாழ்த்துக்கள் ஏதும் தெரிவிக்காமல், மாநில அந்தஸ்து பெற்று இருக்கும் விசிக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கும் மட்டும், தமிழக வெற்றிக் … Read more

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

TN Weather Update 8 District Getting Rain In Next 24 Hours 06 06 24 Idamporul

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்திற்கு மேக மூட்டத்துடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. “ தென் தமிழகத்தை அக்னி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே பெய்து வரும் மழை, … Read more

வரும் ஜூலையில் இருந்து உயருகிறது மின் கட்டணம், யூனிட்டுக்கு எவ்வளவு உயர வாய்ப்பு இருகிறது?

TNEB Electricity Price Hike How Much It Will Increase July 2024 Idamporul

தமிழ்நாடு மின்வாரியம் வரும் ஜூலையில் இருந்து புதிய மின்கட்டண உயர்வை அமல்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழக மின்வாரிய ஆணையம் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் புதிய கட்டண உயர்வை கடந்த 2022-யில் இருந்து அமல்படுத்தி வருகிறது. அதாவது ஒவ்வொரு வருடமும் மின்வாரியத்தின் மீது விழுகின்ற கடன்சுமையை குறைக்க இந்த கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என அரசு சார்பில் கூறப்படுகிறது. ஆனால் ஏழை எளிய மக்களுக்கு இது மிகப்பெரிய பாரமாக வந்து விழுகிறது. கடந்த … Read more

கடும் வெப்ப அலையால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைப்பு!

Tamil Nadu School Reopening Date Postponed Due To Heavy Heat Wave 2024 Idamporul

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிலவும் கடும் வெப்ப அலையால் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. கடும் வெப்ப அலை தேசம் எங்கும் வீசி வருவதால், தேசமே ஸ்தம்பித்து நிற்கிறது. கோடை விடுமுறை முடிந்து ஜூலை 6 பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக கல்வித்துறை அறிவித்து இருந்த நிலையில், வெப்ப அலை இன்னும் ஓயாததால் பள்ளிகள் திறப்பை ஜூலை 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறது. புதுச்சேரியில் ஜூலை 12 பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி … Read more

கல்வியில் கரையிலாத காஞ்சி குறித்த ஒரு சில அரிய தகவல்கள்!

Kanchipuram Tamil Civilization Details Idamporul

தமிழகத்தின் தொன்மையான சில நகரங்கள் என்று எடுத்துக் கொண்டால், அதில் காஞ்சி, மதுரை, பூம்புகார், தொண்டி, முசிறி, வஞ்சி, உறையூர், தகடூர், தஞ்சை, கரூவூர், மாமல்லபுரம், காயல் உள்ளிட்டவைகள் அடங்கும். அவற்றுள் தொண்டை நாடுகளுள் மிக தொன்மையான நகரம் என்று எடுத்துக் கொண்டால், அது காஞ்சி என்றே சொல்லலாம். தற்போது கோவில் நகரம், ஏரிகளின் நகரம் என்றெல்லாம் அழைக்கப்படும் காஞ்சி, பண்டைய காலத்தில் தலை சிறந்த கல்வி நகரமாக விளங்கியதாம். உலகில் பெரும் பெரும் சான்றோர்கள் எல்லாம் … Read more

மதுரை என்றாலே வீரம் என்று சொல்வார்கள், ஆனால் அதன் தொன்மை குறித்து உங்களுக்கு தெரியுமா?

Its All About Madurai Ancient City Idamporul

உலகின் மிகப்பழமையான நாகரீகம் என்பது யூப்ரடிஸ் மற்றும் டைகரிஸ் ஆறுகளுக்கு இடையிலான ஈராக்கின் மெசபடோமியா நாகரீகம் என்று தான் வரலாறு கூறுகிறது. அது கிட்ட தட்ட 6500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் அதற்கும் பழமையான நாகரீகங்கள் எல்லாம் நம் தமிழ் நாகரீகத்தில் இருக்கின்றன என்பதற்கான சான்றுகள் கொஞ்சம் கொஞ்சமாக தொல்லியல் ஆய்வில் கிடைத்து வருகின்றன. கூடல் நகர், தூங்கா நகரம் என்றெல்லாம் அழைக்கப்படும் மதுரை கிட்டதட்ட 10,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்க கூடும் என்று கீழடியில் … Read more

தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் மிதமான மழை!

Moderate Rains In South Tamilnadu And Delta Districts Idamporul

தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களிலும் ஒரு சில டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்து வருவதாகவும், இன்னும் 24 மணி நேரத்திற்கு ஆங்காங்கே மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் விடுத்து இருக்கிறது. “ கடும் வெப்பம் தமிழகத்தையே சுட்டு எரித்து வந்த நிலையில் இந்த மிதமான … Read more

சங்க காலத்திலேயே உலகளாவிய அளவில் வாணிபம் செய்த தமிழர்களின் பழம் பெரும் துறைமுகம்!

All The Details You Know About Sangam Age Poompuhar Idamporul

உலகின் தொன்மையான நாகரிகம் என்றால் அதை மெசபடோமியா நாகரிகம் என்று கூறுவர். அது கிட்ட தட்ட 6500 ஆண்டுகள் பழமையானது. ஆனால் அதற்கெல்லாம் பழமையானது தமிழ் நாகரிகம் என்று கூறினால் நம்ப முடிகிறதா? பூம்புகார், காவேரிப்பூம்பட்டினம், புகார் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த நகரம் சங்க காலச் சோழர்களின் துறைமுக நகரமாக அறியப்படுகிறது. தற்போதைய மயிலாடுதுறைக்கு அருகாமையான பகுதியை தான் அன்றைய புகார் நகரமாக கூறுகின்றனர். உலகின் பல நாடுகள் தங்கள் அடையாளத்தை அறிவதற்கு முன்னதாகவே, தமிழன் இத்துறைமுகத்தின் … Read more

’நீயா நானா’ தோசை பிரபலம், பிரணவ் ரெயிலில் அடிபட்டு பலி!

Neeya Naana Trending Dosai Man Died In Train Accident Idamporul

’நீயா நானா’ எபிசோடில் தனது அம்மாவின் தோசை டாப்பிக்கால் பிரபலமான பிரணவ் அவர்கள் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்றில் அடிபட்டு பலியாகி இருக்கிறார். ‘நீயா நானா’ எபிசோடு ஒன்றில் ’தனது மகன் 20-25 தோசைகள் சாப்பிடுவான், சலிக்காமல் சுட்டுக் கொடுப்பேன்’ என ஒரு அம்மா கூறவே, அந்த தோசை டாப்பிக்கும் அந்த வீடியோவும் இணையமெங்கும் வைரலானது. கடைசியாக வைரலான அந்த அம்மாவையும், அவரின் மகனான பிரணவ் அவர்களையும் பல தனியார் மீடியாக்கள் பேட்டி எல்லாம் எடுத்து இருந்தனர். இந்த … Read more