கல்வியில் கரையிலாத காஞ்சி குறித்த ஒரு சில அரிய தகவல்கள்!
தமிழகத்தின் தொன்மையான சில நகரங்கள் என்று எடுத்துக் கொண்டால், அதில் காஞ்சி, மதுரை, பூம்புகார், தொண்டி, முசிறி, வஞ்சி, உறையூர், தகடூர், தஞ்சை, கரூவூர், மாமல்லபுரம், காயல் உள்ளிட்டவைகள் அடங்கும். அவற்றுள் தொண்டை நாடுகளுள் மிக தொன்மையான நகரம் என்று எடுத்துக் கொண்டால், அது காஞ்சி என்றே சொல்லலாம்.
தற்போது கோவில் நகரம், ஏரிகளின் நகரம் என்றெல்லாம் அழைக்கப்படும் காஞ்சி, பண்டைய காலத்தில் தலை சிறந்த கல்வி நகரமாக விளங்கியதாம். உலகில் பெரும் பெரும் சான்றோர்கள் எல்லாம் காஞ்சி கடிகைக்கு வந்து கல்வி பயின்றதாக கூறப்படுகிறது. சீனப் பயணியான யுவான் சுவாங், புகழ் பெற்ற் நாளந்தா பல்கலைக் கழகத்தில் படித்து விட்டு தனது மேல் படிப்பிற்காக காஞ்சி கடிகைக்கு வந்ததாக கூறப்படுகிறது.
தர்மபாலர், ஜோதிபாலர், புகழ் பெற்ற வர்ம கலைஞர் போதி தர்மர், பெளத்த துறவியான மணிமேகலை, சுமதி உள்ளிட்ட சான்றோர்கள் அனைவரும் காஞ்சியில் தான் தங்கள் வாழ்வியலை கழித்ததாக கூறப்படுகிறது. காஞ்சி கோவில்களில் நகரம் என பெயர் பெற்றதற்கு பல்லவர்கள் தான் காரணமாக கூறப்படுகிறது. பல்லவர்கள் காலத்தில் ஏராளமான குடைவரைக் கோவில்கள் காஞ்சியில் கட்டப்பட்டு இருக்கிறது. புகழ் பெற்ற காஞ்சி கைலாசநாதர் கோவில், பிற்கால பல்லவ மன்னனான இராஜ சிம்மன் ஆட்சிக் காலத்தில் கட்டதாக அறியப்படுகிறது.
” தமிழக நகரங்களின், கோவில்களின் தொன்மைகள் குறித்து உலக நாடுகளே வியந்து கொண்டு இருக்கும் வேளையில், தமிழன் மட்டும் தன் திறமைகளையும், கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஏன் கடத்தாமல் விட்டான் என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே இருக்கிறது “